தென்னிந்திய சினிமா

திடீரென ட்ரெண்ட் ஆன பாகுபலி காட்சி: பாராட்டிய டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இயக்குநர்

செய்திப்பிரிவு

'பாகுபலி 2' படத்தின் க்ளைமேக்ஸ் சண்டைக் காட்சி ஒன்று திடீரென ட்விட்டரில் பலரால் பகிரப்பட்டு வந்தது. என்ன காரணம் என்று சற்று ஆராய்ந்த போது சுவாரசியமான தகவல் ஒன்று கிடைத்தது.

கார்லோஸ் என்கிற ட்விட்டர் பயனர் 'பாகுபலி 2' படத்தின் 50 விநாடிகள் காட்சி ஒன்றைப் பகிர்ந்தார். படத்தின் இறுதி சண்டைக் காட்சியில் நாயகன் பாகுபலியும் மற்ற வீரர்களும், பனை மரத்தின் மீதேறி கோட்டைக்குள் தாவுவது போன்ற சாகசக் காட்சி அது.

இதைப் பகிர்ந்த கார்லோஸ், "ஒலியோடு இந்த முழுக் காட்சியைப் பார்க்கும்போது இதுவரை நான் பார்த்ததில் மிகச்சிறந்த காட்சி இதுதான் என்று தோன்றுகிறது" என்று குறிப்பிட்டிருந்தார். இதை கவனித்த இந்தியர்கள் பலர், 'லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்' படங்களுக்கு இந்தியாவின் பதில் இது என்று கார்லோஸுக்கு பதிலளித்திருந்தனர்.

SCROLL FOR NEXT