தென்னிந்திய சினிமா

'சாஹோ' ரிலீஸ் தேதி மாற்றம்

செய்திப்பிரிவு

பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள 'சாஹோ' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு, ஆகஸ்ட் 30-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

'பாகுபலி' படத்துக்குப் பிறகு பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சாஹோ'. ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளிலும் வெளியாகவுள்ளது.

படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்டப் பணி நடைபெற்று வருகிறது. பல்வேறு சண்டைக் காட்சிகளுக்கான கிராபிக்ஸ் பணிகள் இன்னும் முழுமை பெறாமல் உள்ளன. இதனால், முன்பு அறிவிக்கப்பட்ட ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகுமா என்ற குழப்பம் நீடித்து வந்தது.

பெரும் முதலீடு என்பதால் விநியோகஸ்தர்களும், தயாரிப்பு நிறுவனத்தைத் தொடர்ச்சியாக அணுகி வந்தனர். இதனைத் தொடர்ந்து 'சாஹோ' படத்தின் புதிய வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது படக்குழு. ஆகஸ்ட் 15-ம் தேதி அல்லாமல் ஆகஸ்ட் 30-ம் தேதி தள்ளி வைத்துள்ளனர். 

இதற்கான காரணம் குறித்து தயாரிப்பு நிறுவனம் கூறுகையில், "நாங்கள் ரசிகர்களுக்குச் சிறந்த படமாகக் கொடுக்க விரும்புகிறோம். ஆக்‌ஷன் காட்சிகளை சிறப்பாகக் கொண்டுவர இன்னும் நாட்கள் தேவை. ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடவுள்ளோம் என்பது உறுதி. தேதியை மட்டும் 15-ல் இருந்து 30-க்கு மாற்றுகிறோம்" என்று தெரிவித்துள்ளது.

'சாஹோ' படத்தில் ஷ்ரத்தா கபூர், அருண் விஜய், நீல் நிதின் முகேஷ், மந்த்ரா பேடி, வெண்ணிலா கிஷோர், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் பிரபாஸுடன் நடித்துள்ளனர். 'சாஹோ' பணிகளை முடித்துவிட்டு, கே.கே.ராதா கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகிவரும் படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். இதுவும் பெரும் பொருட்செலவில் தயாராகி வருகிறது.

SCROLL FOR NEXT