தென்னிந்திய சினிமா

”கணவனை காணவில்லை”- மலையாள நடிகை ஆஷா சரத் வீடியோவால் சர்ச்சை

செய்திப்பிரிவு

மலையாள நடிகை  ஆஷா சரத் தனது கணவனை காணவில்லை என்று சமூக வலைதளங்களில் பதிவிட்ட வீடியோ தற்போது சர்ச்சைகுள்ளாகியுள்ளது.

பாபநாசம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மலையாள நடிகை ஆஷா சரத்.

இவர் ’எவிடே’ என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தை கே. கே. ராஜிவ் இயக்கி உள்ளார்.

ஆஷா சரத் இப்படத்தை பிரபலபடுபத்த தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எவிடே என்று ஹாஷ்டேக் படிவிட்டு தனது கணவனை காணவில்லை என்று அவரைப் பற்றி விவரம் தெரிந்தால் அதனை கட்டப்பா காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும் என்று பதிவிட்டிருந்தார். 

இதனைத் தொடர்ந்து இந்த வீடியோ வைரலானது. இந்த வீடியோ ஆஷா கூறியது என்று ஆயிரக்கணக்கானவர்கள் அதனை பகிர்ந்தனர்.

ஆனால் இது படத்தை விளம்பரப்படுத்த படக்குழு செய்த உத்தி என்று தெரிந்ததும் சமூக வலைதளங்களில் பலரும் படக்குழுவையும், ஆஷா சரத்தையும் விமர்சித்தனர்.

இப்படத்தை சமூக வலைதளங்களில் வித்தியாசமாக பிரப்பலப்படுத்த நினைத்த படக் குழுவுக்கு தற்போது எதிர்மறை விளைவுகள் உண்டாகியுள்ளது.

SCROLL FOR NEXT