தென்னிந்திய சினிமா

டூப் இல்லாம கார் ஸ்டண்ட் அடித்த பாலகிருஷ்ணா: பைசா வசூல் படப்பிடிப்பு சுவாரஸ்யம்

ஐஏஎன்எஸ்

நடிகர் பாலகிருஷ்ணா, தனது அடுத்த படமான 'பைசா வசூலி'ல், டூப் போடாமல் கார் ஸ்டண்ட் காட்சியில் நடித்திருக்கிறார்.

இந்த காட்சி பற்றிய வீடியோவை தயாரிப்பு தரப்பு வெளியிட்டது. அதிக ஆபத்துடைய இந்த ஸ்டண்ட் காட்சியை டூப் போடாமல் நடிகர் பாலகிருஷ்ணா தானாகவே நடித்துள்ளார். நடிகை ஷ்ரேயாவும் இந்த காட்சியில் அவருடன் இருந்தார்.

'போக்கிரி' உள்ளிட்ட வெற்றிப்படங்களை தெலுங்கில் இயக்கிய பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகும் 'பைசா வசூல்', செப்டம்பர் 1-ம் தேதி திரைக்கு வருகிறது. படத்தின் டீஸருக்கு ஏற்கனவே ஏகோபித்த வரவேற்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT