தென்னிந்திய சினிமா

சமந்தாவுக்கு நாக சைதன்யா திருமண புடவை பரிசளித்தார்

செய்திப்பிரிவு

தனது வருங்கால மனைவியான நடிகை சமந்தாவுக்கு, நாக சைதன்யா திருமண புடவையை பரிசாக வழங்கியுள்ளார்.

நடிகை சமந்தாவுக்கும், நடிகர் நாக சைதன்யாவுக்கும் வரும் அக்டோபர் மாதம் 6-ம் தேதி கோவாவில் திருமணம் நடக்க வுள்ளது. திருமண நிகழ்ச்சிகள் 6-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை தடபுடலாக நடைபெற உள்ளன. முதலில் இந்து முறைப்படியும், பின்னர் கிறுஸ்துவ முறைப்படியும் திருமணம் நடக்கவுள்ளது. இவர்களின் திருமண நிச்சய தார்த்தத்தின்போது சமந்தா கட்டியிருந்த புடவையில் அவரது வாழ்க்கையில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளை வடிவமைத்திருந்தார். இது அனைவரையும் கவர்ந்தது.

இந்நிலையில் திருமணத்தின் போது உடுத்திக்கொள்ள சமந்தாவுக்கு, நாக சைதன்யா தனது பாட்டிக்கு சொந்தமான ஒரு பட்டுப் புடவையை பரிசளித்துள்ளார். இது சமந்தாவுக்கு மிகவும் பிடித்துப் போயுள்ளதாகவும் திருமணத் தின்போது அந்தப் புடவை யையே கட்டிக்கொள்ள அவர் முடிவெடுத்துள்ளதாகவும் கூறப் படுகிறது.

SCROLL FOR NEXT