மூத்த இயக்குநர் ராகேந்திர ராவ் குறித்த தன்னுடைய பேசுக்கு மன்னிப்புக் கோரியுள்ளார் நடிகை டாப்ஸி.
சமீபத்தில் தனது படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்றில், தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநரான ராகேந்திர ராவ் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கினார் டாப்ஸி. ராகேந்திர ராவ் குறித்து, "ஜூமாண்டி நாடம் என்ற படத்தில் நடித்த போது, நாயகன் தன் மீது தேங்காயை உருட்ட வைத்து படமாக்கியிருந்தார். தன்னை கிளாமராக நடிக்க வேண்டும் எனக் கூறியிருந்தால் நானே நடித்திருப்பேன். ஏன் அவர் அப்படி செய்தார் என்பது தற்போது வரை எனக்கு புரியவில்லை" என்று கூறியிருந்தார் டாப்ஸி.
தெலுங்கு திரையுலகின் மூத்த இயக்குநர் ராகேந்திர ராவ் என்பதால், டாப்ஸி எதிர்ப்பு வலுத்தது. பல்வேறு இயக்குநர்களும் டாப்ஸியின் பேச்சுக்கு தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்தார்கள்.
இந்நிலையில் தன்னுடைய பேச்சுக்கு மன்னிப்புக் கோரியுள்ளார் டாப்ஸி. இது குறித்து டாப்ஸி தன்னுடைய அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் பேசியிருப்பதாவது:
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நான் பேசிய பேச்சு சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டுள்ளது. நான் யாரையும் காயப்படுத்தும் நோக்கத்தில் கூறவில்லை. ஆனால் தற்போது அதுகுறித்து யோசித்த போது என்னுடையப் பேச்சு காயப்படுத்தியுள்ளதாக அறிகிறேன்.
அது தொடர்பான குறுஞ்செய்திகள் மற்றும் ட்விட்களை பார்க்கும்போது உணர்ந்தேன். எனக்கு இதனை புரிந்து கொள்வது கடினமாக உள்ளது. நான் என்ன தவறாக கூறினேன் என்று, நான் அதனை நகைச்சுவைக்காகவே கூறினேன். ஆனால் அது துரதிருஷ்டவசமாக தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
என்னுடைய பேச்சு யாரவையாவது காயப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும் உண்மையாக கூறுகிறேன் நான் காயப்படுத்தும் தொனியில் அதனை கூறவில்லை. என்னுடைய திரைத்துறை வாழ்க்கையில் முக்கிய நபராக இருப்பவரை நான் எப்படி காயப்படுத்த முடியும். நான் அவரது திரைப்படத்திலிருந்துதான் என் திரைத்துறை வாழ்க்கையை தொடங்கினேன்.
நான் அதை எப்போதும் மறக்க மாட்டேன். ஆனால் நான் ராகவேந்திரகாருவை அவமரியாதை செய்ததாக அனைவரும் எடுத்து கொண்டுள்ளது எனக்கு கஷ்டமாக உள்ளது. மறுமடியும் கூறுகிறேன் ஒரு வேளை என் பேச்சு காயப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.
இவ்வாறு தனது வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார் டாப்ஸி.