தென்னிந்திய சினிமா

பெண்கள் குறித்து அவதூறு கருத்து: மலையாள நடிகரிடம் மகளிர் ஆணையம் விசாரணை

செய்திப்பிரிவு

நடிகரும் எம்.பி.யுமான இன்னொசென்ட், பெண்கள் குறித்து அவதூறாக பேட்டி யளித்தது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கேரள மகளிர் ஆணையம் தெரிவித் துள்ளது.

மலையாள திரைப்பட கலைஞர்கள் கூட்டமைப்பின் தலைவரான இன்னொசென்ட் அண்மையில் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்தார். அதில், திரைப்பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் போக்கு மலையாள திரையுலகில் இல்லை. பட வாய்ப்புக்காக எந்த நடிகை யாவது படுக்கையை பகிர்ந்து கொண்டால் அவர் கெட்ட பெண்ணாகவே இருப்பார் என்று கூறியிருந்தார்.

இதுதொடர்பான ஊடக செய்திகளை அடிப்படையாக கொண்டு நடிகர் இன்னொசென்ட் மீது கேரள மகளிர் ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது. இதுகுறித்து ஆணையத்தின் தலைவர் ஜோசபின் கூறியபோது, பெண்கள் குறித்து அவதூறாக இன்னொசென்ட் பேட்டியளித்தது குறித்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம் என்றார்.

நடிகை பாவனா குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாக கருத்து பதிவிட்டதாக நடிகர் திலீப் மீதும் கேரள மகளிர் ஆணையம் வழக்குப் பதிவு செய்துள்ளது.

SCROLL FOR NEXT