நடிகை பாவனா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த பிப்ரவரி 17-ம் தேதி துரதிர்ஷ்டவசமான, மறக்க முடி யாத சோதனையைக் கடந்து வந் தேன். நடந்த சம்பவம் குறித்து நேர்மையாக கேரள காவல்துறை யிடம் புகார் கொடுத்தேன். அது தொடர்பான விசாரணை இப்போது வரை நடந்துகொண்டிருக்கிறது. அந்த விசாரணையில், சமீபத்திய கைதுகளும், தகவல்களும் உங்களைப் போலவே எனக்கும் அதிர்ச்சியைத் தந்துள்ளன.
எனக்கு யாரிடமும் எந்த முன்விரோதமும் இல்லை. இதற்கு முன்பும்கூட, குறிப்பாக யாருடைய பெயரையும் நான் குறிப்பிட்டதும் இல்லை.
கடந்த காலத்தில் இந்த நடிகரு டன் (திலீப்) நான் சில படங்கள் நடித்துள்ளது உண்மைதான். பிற் காலத்தில் தனிப்பட்ட சில பிரச்சினைகளால் எங்களுக்குள் இருந்த நட்பு முறியும்படி ஆனது. தற்போது அவர் குற்றவாளி என நிரூபிக்கத் தேவையான ஆதா ரங்கள் காவல்துறையிடம் இருப் பது எங்களுக்குத் தெரியவந்தது.
தான் தவறாக குற்றம் சாட்டப் பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நடிகர் கூறுகிறார். அது உண்மை என்றால், அவர் குற்ற மற்றவர் என்று நிரூபிக்கத் தேவையான சாட்சிகள் வெளியே வரவேண்டும். இல்லாவிட்டால், அவரது தவறுகள் விரைவில் வெளியே வரவேண்டும். இதுதான் என் விருப்பம். சட்டத்தின் முன் அனைவரும் சமம். அப்பாவியும் தண்டிக்கப்படக்கூடாது, குற்ற வாளியும் தப்பித்துவிடக்கூடாது.
அந்த நடிகருடன் ரியல் எஸ் டேட் உள்ளிட்ட சில முதலீடு களில் நான் கூட்டு வைத்திருப்ப தாக சில தகவல்கள் வருகின்றன. அது பொய். எங்களிடையே அப்படி எதுவும் இல்லை. வேண்டுமானால், தேவைப்படும் எல்லா ஆவணங் களையும் அதிகாரிகளிடம் தரத் தயாராக இருக்கிறேன்.