தென்னிந்திய சினிமா

நாயகியை கைப்பிடிக்கும் இயக்குனர்!

ஸ்கிரீனன்

முன்னணி இயக்குநரான ஆஷிக் அபுவும், நடிகை ரீமா கலிங்கலும் அடுத்த மாதம் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார்கள்.

மலையாளத் திரையுலகில் இயக்குநர் கமலிடம் உதவியாளராக பணியாற்றிவர் ஆஷிக் அபு. 2009ல் 'டாடி கூல்' என்ற படத்தின் மூலம் இயக்குநராக வலம்வர ஆரம்பித்தார்.

அப்படம் சரியான வரவேற்பை பெறாவிட்டாலும், அதனைத் தொடர்ந்து இவர் இயக்கிய 'சால்ட் அண்ட் பெப்பர், '22, Female, Kottayam' உள்ளிட்ட படங்கள் பெரும் வரவேற்பை பெற்றன.

'சால்ட் அண்ட் பெப்பர்' திரைப்படம் பல்வேறு விருதுகளை வாரிக்குவித்தது. அப்படத்தின் தமிழ், தெலுங்கு, கன்னட ரீமேக் உரிமை வாங்கி இயக்கி வருகிறார் நடிகர் பிரகாஷ்ராஜ்.

இவரது இயக்கத்தில் 'சால்ட் (அ) பெப்பர்', '22 Female Kottayam' ஆகிய படங்களில் நாயகியாக நடித்தவர் ரீமா கலிங்கல். '22 Female Kottayam' படத்தில் ரீமா கலிங்கல் நடித்ததில் இருந்தே இருவரும் காதலித்து வந்தார்கள்.

தற்போது இயக்குநர் ஆஷிக் அபு, “நானும் ரீமா கலிங்கலும் அடுத்த மாதம் முதல் வாரத்தில் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT