சர்வதேச இந்திய திரைப்பட அகாடமியின் 2 வது (ஐஃபா) விருதுகள் வழங்கும் விழா மார்ச் 28-ம் தேதி மாலை பிரமாண்டமாக ஹைதராபாத்தில் தொடங்கியது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிப்படங்களுக்கான விருதுகள் வழங்கும் இந்த நிகழ்ச்சியில் எஸ்.பி.முத்துராமன், ஏ.ஆர்.ரஹ்மான், மாதவன், ஜெயம் ரவி, ஜீவா, நாசர், சாந்தனு, பிரசன்னா, கிருஷ்ணா, ஹன்சிகா, வரலட்சுமி, நிக்கி கல்ராணி, ரகுல் பிரீத் சிங், சஞ்சிதா கல்ராணி, ராதிகா, சினேகா, மீனா, அதா சர்மா, பார்வதி நாயர், நிகிஷா படேல், லதா ரஜினிகாந்த், ரசூல் பூக்குட்டி, வெங்கட் பிரபு, ஆர்.கே.செல்வமணி, பி.வாசு உள்பட திரையுலகினர் திரளாக கலந்து கொண்டனர். திரையுலகினரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
முதல் நாள் நிகழ்ச்சியில் விருது பெற்றவர்கள்:
தமிழ் மொழிக்கான விருது பட்டியல் :
சிறந்த படம் : இறுதிச் சுற்று
இயக்குனர்: அட்லீ (தெறி)
நடிகர்: மாதவன் (இறுதிச் சுற்று)
நடிகை: ரித்திகா சிங் (இறுதிச் சுற்று)
குணச்சித்திர நடிகர்: நாகார்ஜூனா (தோழா)
உறுதுணை நடிகை: நைனிகா (தெறி)
நகைச்சுவை நடிகர்: ஆர்.ஜே. பாலாஜி (நானும் ரவுடிதான்)
வில்லன் நடிகர்: மகேந்திரன் (தெறி)
இசையமைப்பாளர்: ஏ.ஆர். ரஹ்மான் (அச்சம் என்பது மடமையடா)
பாடகர்: அனிருத் (நானும் ரவுடிதான்)
பாடகி: நீத்தி மோகன் (நானும் ரவுடிதான்)
மலையாள மொழிக்கான விருது பட்டியல்
சிறந்த படம் : புலி முருகன்
இயக்குனர்: மார்ட்டின் பிராக்கட் (சார்லி)
நடிகர்: துல்கர் சல்மான் (சார்லி)
நடிகை: ரஜிஷா விஜயன் (அனுராக கரிக்கின் வெள்ளம்)
குணச்சித்திர நடிகர்: விநாயகன் (கம்மட்டிபாடம்)
குணச்சித்திர நடிகை: அபர்ணா கோபிநாத் (சார்லி)
நகைச்சுவை நடிகர்: சவபின் சாஹிர் (சார்லி)
வில்லன் நடிகர்: சம்பத் (ஆடு புலி ஆட்டம்)
இசையமைப்பாளர்: கோபி சுந்தர்
பாடகர்: விஜய் ஏசுதாஸ்
பாடகி: ஸ்ரேயா ஜெயதீப்