தென்னிந்திய சினிமா

மலையாளத்தில் அறிமுகமாகும் சந்தானம்

ஸ்கிரீனன்

மலையாளத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா நடித்துவரும் 'சலாலா மொபைல்ஸ்' படத்தில் காமெடியனாக நடித்திருக்கிறார் சந்தானம்.

துல்கர் சல்மான், நஸ்ரியா நடித்து வரும் படம் 'சலாலா மொபைல்ஸ்'. விளம்பர இயக்குநர் ஹரிதாஸ் இப்படத்தின் மூலம் சினிமா இயக்குநராக அறிமுகமாகிறார். ஜனவரி 23ம் தேதி இப்படம் வெளிவர இருக்கிறது.

இப்படத்தில், கோயம்புத்தூரில் மொபைல் கடை வைத்திருப்பவராக சந்தானம் நடித்திருக்கிறார். இது மலையாளத்தில் சந்தானம் நடிப்பில் வெளிவரும் முதல் படமாகும். துல்கர் சல்மானுடன் சந்தானம் நடித்த காட்சிகள் சமீபத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.

இப்படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்தே, தொடர்ந்து மலையாளத்தில் நடிக்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்வாராம் சந்தானம்.

SCROLL FOR NEXT