தென்னிந்திய சினிமா

ஆகஸ்ட் 12-ல் வெளியாகிறது தெலுங்கு பிரேமம்

ஐஏஎன்எஸ்

மலையாள ரொமாண்டிக் வெற்றித் திரைப்படமான 'பிரேமம்', நாக சைதன்யாவின் நடிப்பில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு, ஆகஸ்ட் 12-ம் தேதி வெளியாகிறது.

இதுகுறித்து தகவல் தெரிவித்த படக்குழுவினர், ''படம் முடிவடையும் தருவாயில் உள்ளது. ஜூலை மாதத்தில் ஆடியோ வெளியாக உள்ளது. படத்தை ஆகஸ்ட் 12-ம் தேதி வெளியிட முடிவு செய்திருக்கிறோம்'' என்று கூறினர்.

தெலுங்கு 'பிரேமம்' படத்தில் சந்தூ மொண்டேட்டியின் இயக்கத்தில், கதாநாயகிகளாக ஸ்ருதி ஹாசன், அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டின் ஆகியோர் நடிக்கின்றனர்.

மலையாளத்தில் நிவின் பாலி நடித்த கேரக்டரில் நாகசைதன்யா, அவரின் வாழ்க்கையின் மூன்று பருவங்களில் ஏற்படும் காதலைச் சொல்கிறார்.

படத்தை எஸ். நாகவம்சி மற்றும் ராதா கிருஷ்ணா தயாரிக்க, கோபி சுந்தர் மற்றும் ராஜேஷ் முருகேசன் ஆகிய இருவரும் படத்துக்கு இசை அமைத்திருக்கின்றனர்.

SCROLL FOR NEXT