மறைந்த நடிகர் நாகேஸ்வர ராவின் உடலுக்கு தமிழ், தெலுங்கு திரைப்பட உலகினர் பலர் நேரடியாக அஞ்சலி செலுத்தினர்.
இதில்,மோகன்பாபு தம்பதி, ராஜேந்திரபிரசாத், பவன்கல்யாண், ராஜசேகர், மகேஷ் பாபு, கிருஷ்ணா, கிருஷ்ணம்ராஜு, பிரபாஸ், ராணா, தருண், காந்த், சுமன், வெங்கடேஷ், சரத்குமார், பாலகிருஷ்ணா, ஹரிகிருஷ்ணா, ஜூனியர் என்.டி.ஆர்., கோட்டா னிவாசராவ்,, ஜமுனா, சரோஜா தேவி, கிருஷ்ணகுமாரி, சவுகார் ஜானகி, வாணி, ஜெயசுதா, ராதிகா, ஜீவிதா, தயாரிப்பாளர்கள் ராமாநாயுடு, தாசரி நாராயணராவ், இயக்குநர் ராஜமௌலி, பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், தேவிபிரசாத், பி.சுசீலா உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.
இதேபோன்று, அரசியல் பிரமுகர்கள் சந்திரபாபு நாயுடு, சிரஞ்சீவி, விஜயலட்சுமி, ஜெகன்மோகன், சட்டப்பேரவைத் தலைவர் என்.மனோகர், மாநில அமைச்சர்கள், ஜானா ரெட்டி, வட்டி வசந்த குமார், கல்ல அருணகுமாரி, எம்.பி.க்கள் லகடபாடி ராஜகோபால், உண்டவல்லி அருண்குமார், சி.எம். ரமேஷ், மற்றும் எம்.எல்.ஏக்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
ரசிகர்கள், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தினர்.
வியாழக்கிழமை மதியம் ஒரு மணியளவில், நாகேஸ்வரராவின் இறுதி ஊர்வலம் அவரது அன்னபூர்ணா ஸ்டுடியோவில் இருந்து புறப்பட்டு எர்ரகட்டா இடுகாட்டில் இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
நாகேஸ்வரராவின் மறைவிற்கு புதன்கிழமை ஆந்திர மாநில சட்டப்பேரவை இரங்கல் தெரிவித்தது. மேலும், பிரதமர் மன்மோகன்சிங், பாஜக தலைவர் ராஜ்நாத்சிங், தமிழக ஆளுநர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா, அமிதாப்பச்சன், ஆகியோர் தங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித் துள்ளனர். நாகேஸ்வர ராவின் மறைவையொட்டி, வியாழக் கிழமை, ஆந்திர மாநிலம் முழுவதும் திரையரங்குகள் இயங்காது என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. வியாழக் கிழமை நடைபெறவிருந்த படப் பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன.