தென்னிந்திய சினிமா

தமிழ் ரீமேக்காகும் த்ரிஷ்யம்

ஸ்கிரீனன்

மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் 'த்ரிஷ்யம்' படத்தின் ரீமேக்கில் நடிப்பதற்கு கடும் போட்டி நிலவி வருகிறது.

மோகன்லால், மீனா உள்ளிட்ட பலர் நடிக்க, ஜீது ஜோசப் இயக்கியிருக்கும் படம் 'த்ரிஷ்யம்'. கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி வெளியான இப்படம், பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இருந்து ரீமேக் உரிமைக்கு பேச்சுகள் தொடங்கியது.

கடும் போட்டி இடையே தமிழ், இந்தி, கன்னட ரீமேக் உரிமையை மோகன்லாலின் உறவினர் சுரேஷ் பாலாஜி வாங்கினார். சுரேஷ் பாலாஜியிடம் இருந்து தமிழ் உரிமையை 'மாலினி 22 பாளையங்கோட்டை' படத்தயாரிப்பாளர் ராஜ்குமார் வாங்கியிருக்கிறார். கன்னட உரிமையை முகேஷ் மேத்தாவும், இந்தி உரிமையை ரிலையன்ஸ் நிறுவனமும் வாங்கியிருக்கிறது.

தமிழ் மற்றும் இந்தி உரிமையை இயக்கும் பொறுப்பை இயக்குநர் ஜீது ஜோசப்பே ஏற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மோகன்லால், மீனா வேடத்தில் நடிக்க தமிழ் திரையுலகில் கடும் போட்டி நிலவி வருகிறது.

SCROLL FOR NEXT