தென்னிந்திய சினிமா

தோல்வியடைந்த பாய்!

ஸ்கிரீனன்

நாகார்ஜுன் நடித்து, தயாரித்திருக்கும் 'பாய்' திரைப்படம் ஆந்திராவில் தோல்வியை தழுவியுள்ளது.

நாகார்ஜுன், ரிச்சா நடிப்பில் வீரப்பத்ரம் இயக்கத்தில் தயாரான படம் 'பாய்'. 42 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தனது அன்னபூர்ணா தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்திருந்தார் நாகார்ஜுன்.

படத்தின் போஸ்டர்கள், டிரெய்லர்கள் என மக்களிடையே எதிர்ப்பார்ப்பு நிலவி வந்தது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஆந்திராவில் வெளியானது.

முதல் நாள் வசூலே 2.88 கோடி தான். பெரும் எதிர்பார்ப்புவுடன் வந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் படத்தின் பட்ஜெட்டையாவது வசூல் செய்யுமா என்று கேள்வி நிலவி வருகிறது.

தெலுங்கில் ஜுனியர் என்.டி.ஆர் நடித்த 'ராமைய்யா வஸ்தாவய்யா', நாகார்ஜுன் நடித்த 'பாய்' ஆகிய படங்கள் தோல்வியுற்றாலும், இப்படங்களுக்கு முன்னர் வெளியான பவன் கல்யாணின் 'அத்திரண்டிக்கி தாரேதி' படம் இன்னும் ஹவுஸ் ஃபுல்லாக ஒடிக் கொண்டிருக்கிறது.

தெலுங்கு பாக்ஸ் ஆபிஸில் நம்பர் 1 இடத்தினை பிடித்துவிட்டாலும், படக்குழு மேலும் வசூலை அதிகரிக்க சுமார் 6 நிமிட காட்சிகளை இந்த வாரம் முதல் மேலும் இணைக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

SCROLL FOR NEXT