'பாஹுபாலி' படம் உருவாகும் விதத்தினை இன்று YOUTUBE தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள்.
பிரபாஸ், ராணா, அனுஷ்கா, நாசர், சத்யராஜ் மற்றும் பலர் நடிக்க, தெலுங்கு திரையுலகில் இதுவரை இல்லாத அளவிற்கு மெகா பட்ஜெட்டில் தயாராகி வரும் படம் 'பாஹுபாலி'. 'மஹதீரா', 'நான் ஈ' உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிய ராஜமெளலி இயக்கி வருகிறார்.
படப்பிடிப்பு தளத்தினில் கூட படக்குழு சம்பந்தப்பட்ட ஆட்களைத் தவிர வேறு யாரையும் உள்ளே அனுமதிப்பது இல்லையாம். இன்று பிரபாஸ் பிறந்த நாள் என்பதால், படம் உருவான விதத்தின் ஒன்றரை நிமிட ( 90 நொடிகள்)வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்கள்.
பிரபாஸ், சத்யராஜ் ஆகியோர் எப்படி பயிற்சி எடுக்கிறார்கள் என்பது அவ்வீடியோவில் இடம்பெற்றுள்ளது. அந்த வீடியோ பதிவின் மூலம் 2015ல் தான் படம் வெளியாகும் என்பது தெரிகிறது.
படப்பிடிப்பு முடிந்தாலும், கிராபிக்ஸ் பணிகள் முடியவே ஒரு வருடம் ஆகுமாம். ஆகையால் 2015ல் தான் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள்.