’பாஹுபாலி’ படத்தின் படப்பிடிப்புத் தளத்தைப் பார்த்துவிட்டு பாராட்டு தெரிவித்திருக்கிறார் பிரபல தயாரிப்பாளர் ராமோஜி ராவ்.பிரபாஸ், அனுஷ்கா, ராணா, சத்யராஜ், சுதீப், நாசர் என ஒரு நட்சத்திர பட்டாளத்தினைக் கொண்டு எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிவரும் படம் ‘பாஹுபாலி’. கீராவானி இசையமைக்க, செந்தில் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
சரித்திர காலப்படம் என்பதால் பிரமாண்ட அரங்குகள் அமைத்திருக்கிறார் கலை இயக்குனர் சாபு சிரில். இப்படத்திற்காக ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் ஒரு பிரமாண்ட அரங்கில் படப்பிடிப்பு நடத்தி வந்தார்கள்.
பிலிம் சிட்டியின் நிறுவனர் ராமோஜி ராவ் இப்படப்பிடிப்பு தளத்திற்கு சென்று எவ்வாறு படப்பிடிப்பு நடைபெறுகிறது என்பதை காணச் சென்றார். அனைவரிடமும் பேசிவிட்டு திரும்பியவர், ‘பாஹுபாலி’ படக்குழுவிற்கு நீண்ட வாழ்த்துச் செய்தி ஒன்றினை அனுப்பிருக்கிறார்.
அவ்வாழ்த்துச் செய்தியில் “’பாஹுபாலி’ படம் வெற்றிடைய வாழ்த்துகிறேன். பிரம்மாண்ட அரங்குகளில் மிக நுணுக்கமாக சின்ன சின்ன விஷயங்களையும் கவனித்து அமைத்து இருக்கிறார்கள். “ஒவ்வொரு காட்சியையும் மிக துல்லியமாக காட்சிப்படுத்துவார் ராஜமெளலி என்பது அனைவருக்கும் தெரியும். இப்படமும் அவ்வாறே பிரமமண்டமாக உருவாகி வருகிறது. வெற்றி பெரும் என்பதில் சந்தேகமில்லை.” என்று கூறியுள்ளார்.
இயக்குனர் ராஜமெளலி ட்விட்டர் தளத்தில் ராமோஜி ராவின் வாழ்த்து செய்தியினை தனது வெளியிட்டு “ இவ்வாழ்த்துச் செய்தியினை 100 விருதுகளுக்கு சமமாக கருதுகிறேன். ’பாஹுபாலி’ படக்குழு இவரது வாழ்த்துச் செய்தியினை பூர்த்தி செய்யும் வகையில் பணியாற்றும்” என்று தெரிவித்திருக்கிறார்.