பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ், ‘பாகுபலி’ படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் உருவாகும் ‘சாஹூ’ படத்தில் நடித்துள்ளார். தற்போது அடுத்த படத்தில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
இப்படத்தை கே.கே.ராதாகிருஷ்ண குமார் இயக்குகிறார். ‘பாகுபலி’. ‘சாஹூ’ படங்கள் போல இந்த படமும் தமிழ் தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் உருவாகிறது. அதிக பொருட்செலவு, பல்வேறு நாடுகளில் விதவிதமான லொக்கேஷன்கள் என பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா, இசையமைப்பாளராக அமித் திரிவேதி, படத்தொகுப்பாளராக கர் பிரசாத், புரொடக்சன் டிசைனராக ரவீந்தர் என பல பிரபலங்களும் இப்படத்தில் இணைகின்றனர்.