தென்னிந்திய சினிமா

புற்று நோயால் பாதிக்கப்பட்ட கேரள நடிகை: உதவி கேட்கும் சக நடிகர்கள்

செய்திப்பிரிவு

மலையாளத்தில் மோகன்லால் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்களுடன் நடித்த நடிகை சரண்யா சசி புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அவரது சிகிச்சைக்கு உதவும்படி சக நடிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மலையாளத்தில் மோகன்லால் நடித்த ‘சோட்டா மும்பை’,பாம்பே மார்ச் 12’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சரண்யா சசி. இவர் தமிழில் பச்சை என்கிற முத்து என்ற படத்திலும் நடித்திருக்கிறார்.

இவருக்கு முன்னரும் மூளையில் கட்டி ஏற்பட்ட நிலையில் அதனை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்துள்ளனர்.

இந்த நிலையில் மீண்டும் அவருக்கு மூளையில் கட்டி ஏற்படுட்டுள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சிகிச்சைக்கு அதிக பணம் தேவைப்படுவதால் அவருக்கு உதவ வேண்டும் என்று சக நடிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT