தென்னிந்திய சினிமா

நீங்கள் எங்களின் பெருமை: பார்வதிக்கு புகழாரம் சூட்டிய சமந்தா

ஸ்கிரீனன்

நீங்கள் எங்களின் பெருமை என்று 'உயரே' படத்தில் நடித்ததிற்காக பார்வதிக்கு புகழாரம் சூட்டியுள்ளார் நடிகை சமந்தா

ஏப்ரல் 26, 2019-ல் வெளியான மலையாளப் படம் 'உயரே'. ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண் எப்படி போராடி ஜெயிக்கிறாள் என்பதை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கியிருந்தார்கள். இதில் ஆசிட் தாக்குதலுக்கு உள்ளானவராக பார்வதி நடித்திருந்தார்.

மனு அசோகன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஆஷிப் அலி, டோவினோ தாமஸ், பார்வதி, சித்திக் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். விமர்சன ரீதியாக பலராலும் கொண்டாட்டப்பட்டது. மேலும், தென் கொரியாவில் வெளியான முதல் மலையாளப் படம் இதுவாகும். இந்தியப் படங்களில் தென் கொரியாவில் வெளியான 2-வது படம் என்ற பெருமையையும் பெற்றது.

சமீபத்தில் இப்படத்தைப் பார்த்துவிட்டு, பார்வதிக்கு தனது ட்விட்டர் பதிவில் புகழாரம் சூட்டியுள்ளார் சமந்தா. இது தொடர்பாக, ’உயரே’ பாருங்கள்... இந்த படம் உங்களை கோபப்படுத்தும், அழவைக்கும், சிந்திக்க வைக்கும், காதலிக்க வைக்கும், நம்பிக்கை கொள்ள வைக்கும், உங்களை ஈர்க்கும். நன்றி பார்வதி... நீங்கள் எங்களின் பெருமை.. படக்குழுவினருக்கும், இயக்குநருக்கும், கதாசிரியருக்கும் வாழ்த்துகள்... முற்றிலும் புத்திசாலித்தனமான படம்” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT