தென்னிந்திய சினிமா

தெலுங்கில் பிஸியான நயன்தாரா

அபராசிதன்

கோலிவுட்டில் ஸ்டிரைக் தொடர்வால், தெலுங்குப் படத்தில் பிஸியாகி விட்டார் நயன்தாரா.

சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் உருவாகிவரும் தெலுங்குப் படம் ‘சை ர நரசிம்ம ரெட்டி’. 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரரான உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாறு தான் இந்தப் படம். நரசிம்ம ரெட்டியாக சிரஞ்சீவி நடிக்க, அமிதாப் பச்சன், ஜெகபதி பாபு, விஜய் சேதுபதி, கிச்சா சுதீப், நயன்தாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் ஷூட்டிங் தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

விடுமுறைக்காக, காதலர் விக்னேஷ் சிவனுடன் அமெரிக்கா சென்று திரும்பிய நயன்தாரா, தற்போது ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார். தமிழ்த் திரையுலகில் வேலை நிறுத்தம் நடைபெற்று வருவதால், கால்ஷீட்டை மொத்தமாக வாரி வழங்கியிருக்கிறாராம் நயன்.

தமிழில் அஜித் ஜோடியாக ‘விசுவாசம்’, கே.எம்.சர்ஜுன் இயக்கும் படம் ஆகியவற்றில் கமிட்டாகியுள்ளார் நயன்தாரா. வேலை நிறுத்தம் முடியும்வரை தெலுங்குப் படத்தின் கவனம் செலுத்தும் நயன், அதன்பிறகு தமிழ்ப் படங்களில் நடிக்கவுள்ளார்.

SCROLL FOR NEXT