தமிழில் ‘கேணி’ என்று வெளியான ‘கிணர்’ படத்துக்கு கேரள அரசு விருது அறிவித்துள்ளது.
ஜெயப்பிரதா, ரேவதி, அர்ச்சனா, அனுஹாசன், ரேகா, பார்வதி நம்பியார், பார்த்திபன், நாசர், பசுபதி, தலைவாசல் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ஜாய் மேத்யூ உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான படம் ‘கிணர்’. தமிழில் இந்தப் படம் ‘கேணி’ என்ற பெயரில் ரிலீஸானது. எம்.ஏ.நிஷாத் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். பாடல்களுக்கு ஜெயச்சந்திரன் இசையமைக்க, பின்னணி இசையை மலையாளத்தில் பிஜிபாலும், தமிழில் சாம் சி.எஸ்.ஸும் அமைத்திருந்தனர்.
தமிழக – கேரள எல்லையில் நடக்கும் தண்ணீர்ப் பிரச்னையை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தது. தமிழகத்திற்கு ஆதரவாக இந்தப் படத்தில் கூறப்பட்டிருந்ததால், கேரளாவின் சில இடங்களில் எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும், கேரள அரசு ‘கிணர்’ படத்துக்கு மாநில அரசு விருது அறிவித்துள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட 48-வது மாநில அரசு விருதுகளில், சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான விருது இயக்குநர் எம்.ஏ.நிஷாத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.