தென்னிந்திய சினிமா

கன்னடத்தில் ரீமேக் ஆகிறது ‘பரியேறும் பெருமாள்’

செய்திப்பிரிவு

மாரி செல்வராஜ் இயக்கிய ‘பரியேறும் பெருமாள்’ படம், கன்னடத்தில் ரீமேக் செய்யப்படுகிறது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான படம் ‘பரியேறும் பெருமாள்’. இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்தது. சாதிப் பிரச்சினையை அடிப்படையாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டது.

கதிர் ஹீரோவாக நடிக்க, ஆனந்தி ஹீரோயினாக நடித்தார். யோகி பாபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்தார். இந்தப் படம், பெரும்பாலானோரால் வெகுவாகக் கொண்டாடப்பட்டது. திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டது.

இந்நிலையில், இந்தப் படம் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் ‘களவாணி மாப்பிள்ளை’ படத்தை இயக்கிய காந்தி மணிவாசகம், இந்த ரீமேக்கை இயக்குகிறார்.

ஹீரோவாக ஏவி.எம் குடும்பத்தின் மருமகனான மைத்ரேயா நடிக்கிறார். பெங்களூர் கதைக்களம் என்பதால், அங்குள்ள மக்களுடன் மைத்ரேயாவைப் பழக வைத்துள்ளார் இயக்குநர். கன்னட சினிமாவில் பிரபலமான வில்லன், நாயகியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இதன் தொடக்க விழா, விரைவில் பெங்களூரில் நடைபெற இருக்கிறது.

SCROLL FOR NEXT