தென்னிந்திய சினிமா

தென்னிந்திய- ஹாலிவுட் கூட்டுத் தயாரிப்பாக உருவாகும் மாதவன் - அனுஷ்கா படம்

ஸ்கிரீனன்

சில நாட்களுக்கு முன்பு தெலுங்குத் திரையுலகின் முன்னணிக் கதாசிரியரும், தயாரிப்பாளருமான கோனா வெங்கட் தன் படத்தில் அனுஷ்கா நடிக்கவுள்ளதை உறுதிப்படுத்தினார்.

'பாகுபலி', 'பாகமதி' ஆகிய படங்களைத் தொடர்ந்து அனுஷ்கா நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்து பல்வேறு செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன. ஆனால், அதிகாரபூர்வமாக எந்தவொரு அறிவிப்புமே வெளியாகாமல் இருந்தது.

சில நாட்களுக்கு முன்பு தெலுங்குத் திரையுலகின் முன்னணிக் கதாசிரியரும், தயாரிப்பாளருமான கோனா வெங்கட் தன் படத்தில் அனுஷ்கா நடிக்கவுள்ளதை உறுதிப்படுத்தினார். தற்போது, அப்படம் குறித்த அதிகாரபூர்வத் தகவலை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''கோனா ஃபிலிம் கார்ப்பரேஷனும், பீப்பிள் மீடியா ஃபேக்டரியும் இணைந்து இந்த பெருமைமிகு திரைப்படத்தில் பங்காற்றுவதில் பெருமை கொள்கின்றன. முதல் தென்னிந்திய - ஹாலிவுட் கூட்டுத் திரைப்படம். 

மாதவன், அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி பாண்டே, சுப்பராஜு எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளத்துடன் ஹாலிவுட்டின் முன்னணி நடிகர்களும் நடிக்கின்றனர். கோபி சுந்தர், கோபி மோஹன், நீரஜா கோனா என இந்தியாவின் முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றுவதிலும் பெருமை கொள்கிறோம். 

சிறந்த ஹாலிவுட் தொழில்நுட்பக் கலைஞர்களும் இணைகின்றனர். அவர்களது பெயர் விரைவில் வெளியிடப்படும். மார்ச் 2019 அன்று படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்தப் படத்தை ஆரம்பிப்பதில் பேரார்வத்துடன் இருக்கிறோம். எங்கள் இயக்குநர் ஹேமந்த் மதுர்கர், கடந்த இரண்டு வருடங்களாக, இந்தப் படம் வெற்றி பெற அவர் அணியுடன் உழைத்து வருகிறார்''.

இவ்வாறு கோனா வெங்கட் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT