நமது மலையாள படங்கள் இவ்வளவு வசூல் செய்தது என்று கூறு, அதை கொண்டாடாமல் விமர்சிக்கிறார்கள், ஆனால் விஜய் படத்தை மட்டும் இங்கு கொண்டாடுகிறார்கள் என்று கேரள திரைப்பட ரசிகர்களை மோகன்லாலின் ‘ஒடியான்’ பட இயக்குனர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மலையாள நடிகர் மோகன்லால் நடித்து புதுமுக இயக்குனர் விஏ ஷிரிக்குமார் மேனன் இயக்கத்தில் ‘ஒடியான்’ திரைப்படம் கேரளாவில் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகி உள்ளது.
ஓடியான் படத்துக்கு கலவையாக விமர்சனங்கள் ரசிகர்கள் தரப்பிலிருந்து வந்துக் கொண்டிருக்கும் நிலையில், இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட இயக்குனர் ஷிவ்குமார் விஜய் குறித்து கூறிய கருத்தால் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஒடியான் திரைப்பட விளம்பர நிகழ்வு ஒன்றில் ஷிரிக்குமார் பேசும்போது, “ நமது மலையாள படங்கள் இவ்வளவு வசூல் செய்தது என்று கூறு. அதை கொண்டாடாமல் விமர்சிக்கிறார்கள்.. ஆனால் விஜய் படத்துக்கு இவ்வளவு வசூல் என்றால் மட்டும் இங்கு கொண்டாடுகிறார்கள். இதை மன நோய் என்றுதான் கூறுவேன்” என்றார்.
இந்த நிலையில் இவர் கூறிய இக்கருத்தை கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்கள் பலர் விமர்சித்துள்ளனர்.
படம் சுமாரான வரவேற்பை பெற்றுள்ளதால் ஒடியான் பட இயக்குனர் விஜயை விமர்சிக்கிறார் என்று சமூக வலைதளங்களில் அவர்கள் விமர்சித்து வருகின்றனர்.