‘கீதா கோவிந்தம்’ படத்தின் மூலம் புதிய சாதனையைப் படைக்கப் போகிறார் விஜய் தேவரகொண்டா.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் ஆகஸ்ட் 15-ம் தேதி ரிலீஸான தெலுங்குப் படம் ‘கீதா கோவிந்தம்’. பரசுராம் இயக்கியுள்ள இந்தப் படத்தில், விஜய் தேவரகொண்டா ஜோடியாக ராஷ்மிகா நடித்துள்ளார். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘இன்கெம் இன்கெம் காவாலே’ பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ளது. பாடல் மட்டுமல்ல, படமும்தான். படம் பார்த்த எல்லோருமே புகழ்ந்து வருகின்றனர்.
5 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படம், 9 நாட்களில் உலக அளவில் 81 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இன்னும் சில நாட்களில் 100 கோடி ரூபாயைத் தொட்டுவிடும். அப்படித் தொட்டுவிட்டால், தெலுங்கு சினிமாவில் முதன்முதலில் 100 கோடி ரூபாய் வசூலித்த முதல் இளம் நாயகன் என்ற சாதனைக்குச் சொந்தக்காரராகி விடுவார் விஜய் தேவரகொண்டா.
அடுத்ததாக ‘டாக்ஸி வாலா’ என்ற தெலுங்குப் படமும் ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது. மேலும், தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிவரும் ‘நோட்டா’ என்ற படத்திலும் நடித்து வருகிறார் விஜய் தேவரகொண்டா.