தென்னிந்திய சினிமா

கவனம் ஈர்க்கும் ராஜமவுலியின் ‘வாரணாசி’ பட டைட்டில் டீசர்: ருத்ரா பாத்திரத்தில் மிரட்டும் மகேஷ் பாபு

வேட்டையன்

ராஜமவுலி இயக்கத்தில், மகேஷ் பாபு நாயகனாக நடிக்கும் படம் ‘வாரணாசி’. இதில் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இது பார்வையாளர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இதில் ‘ருத்ரா’ என்ற கதாபாத்திரத்தில் மகேஷ் பாபு நடிக்கிறார்.

அவருடன் இதில் ‘கும்பா’ என்ற கதாபாத்திரத்தில் பிருத்விராஜும், மந்தாகினி என்ற கதாபாத்திரத்தில் பிரியங்கா சோப்ராவும் நடிக்கின்றனர். இந்​தப் படத்​துக்​காக ‘குளோப் டிரோட்​டர்’ என்ற சாகச உலகத்​தைப் படக்​குழு உருவாக்​கி​யுள்​ளது. இதற்​கான விழாவை ஹைதரா​பாத்​தில் சனிக்கிழமை நடைபெற்றது. அதில் இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியிடப்பட்டது.

டைட்டில் டீசர் எப்படி? - சுமார் 3.40 நிமிடங்கள் ரன் டைம் கொண்டுள்ளது வாரணாசி படத்தின் டைட்டில் டீசர். 6-ம் நூற்றாண்டின் வாரணாசி உடன் இதன் முதல் ஃப்ரேம் தொடங்குகிறது. கங்கை நதியின் விடியலில் வாரணாசி ஜொலிக்கிறது. அங்கிருந்து 2027-ம் ஆண்டில் பூமியின் மீது எரிகல் ஒன்று விழுகிறது. அண்டார்டிகாவின் ராஸ் பனி அடுக்கு, ஆப்பிரிக்காவின் கென்யாவில் உள்ள தேசிய வனவியல் பூங்கா, த்ரேதா யுகத்தில் இலங்கை நகரம், பின்னர் மீண்டும் வாரணாசியின் மணிகர்ணிகா காட் பகுதி என அடுத்தடுத்த காட்சிகள் நகர்கிறது. அதன் பின்னர் காளை மீது நாயகன் மகேஷ் பாபு, கையில் திரிசூலத்தை ஏந்தி வருவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.

>>டைட்டில் டீசர் வீடியோ லிங்க்

SCROLL FOR NEXT