தென்னிந்திய சினிமா

‘நாகபந்தம்’ படத்துக்காக பிரம்மாண்ட சிவன் கோயில் செட்!

செய்திப்பிரிவு

அபிஷேக் நாமா எழுதி இயக்கும் படம் ‘நாகபந்தம்’. இதை, கிஷோர் அன்னபுரெட்டி, நிஷிதா நாகிரெட்டி ஆகியோர் தயாரிக்கின்றனர்.

ஆன்மிகம் மற்றும் சாகசங்கள் நிறைந்த படமான இதற்கு சவுந்தர் ராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். அபே இசை அமைக்கிறார். இதில் விராட் கர்ணா, நபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன், ஜகபதி பாபு, ஜெயபிரகாஷ், முரளி சர்மா, பி.எஸ்.அவிநாஷ் மற்றும் பலர் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்துக்காக ‘ஓம் வீர நாகா’ எனும் பக்திப் பாடல் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.

இதற்காக ஹைதராபாத், ராமாநாயுடு ஸ்டூடியோவில் பிரம்மாண்டமான சிவன் கோவில் செட் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆர்ட் டைரக்டர் அசோக் குமார் தலைமையிலான குழு, அந்தக் கோயிலின் தெய்வீகத் தோற்றத்தை, உயிரோட்டமூட்டும் வகையில் வடிவமைத்துள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

“இந்தியாவின் பண்டைய விஷ்ணு கோயில்களின் பின்னணியில் உருவாகும் இப்படம் நாகபந்தம் எனப்படும் மறைக்கப்பட்ட ஆன்மிக மரபை வெளிக்கொணர்கிறது. பத்மநாப சுவாமி, புரி ஜகந்நாதர் போன்ற கோயில்களில் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட பொக்கிஷக் கதைகளில் இருந்து ஊக்கம் பெற்று, புராணமும் மர்மமும் கலந்த தெய்வீகத் திரில்லராக உருவாகிறது. பக்தியும் அதிரடி அம்சங்களும் இணைந்த அற்புதமான திரை அனுபவமாக இப்படம் இருக்கும்” என்று படக்குழு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT