ராகுல் சதாசிவன் இயக்கத்தில் மம்மூட்டி நடித்த மலையாள படம் ‘பிரம்மயுகம்’. கேரள நாட்டுப்புறக் கதைகளின் பின்னணியில், கருப்பு - வெள்ளையில் இப்படம் எடுக்கப்பட்டது.
இதில் கொடுமோன் போட்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மம்மூட்டி. கடந்த 2024-ம் ஆண்டு வெளியான இப்படத்தில் மம்மூட்டியின் நடிப்புக்கு விருது கிடைக்கும் என்று கூறப்பட்டது.
அதேபோல சிறந்த நடிகருக்கான கேரள அரசின் விருதை அவர் சமீபத்தில் பெற்றார். இந்நிலையில் இப்படம் ஆஸ்கர் அகாடமியில் திரையிடப்பட இருக்கிறது.
லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஆஸ்கர் அகாடமியின் அருங்காட்சியகத்தில், அடுத்த ஆண்டு பிப்.12-ம்தேதி திரையிடப்படும். இதில் பங்கேற்கும் ஒரே இந்தியப் படம் இது. இதை நடிகர் மம்மூட்டி, தன துசமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.