‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு மகேஷ்பாபு ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார், இயக்குநர் ராஜமவுலி. இதில் வில்லனாக நடிக்கும் பிருத்விராஜின் முதல் தோற்ற போஸ்டரை ராஜமவுலி வெளியிட்டுள்ளார். அவர் ‘கும்பா’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இதுபற்றி ராஜமவுலி வெளியிட்டுள்ள பதிவில், ” பிருத்விராஜுடன் முதல் ‘ஷாட்’டை எடுத்த பிறகு, நான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த நடிகர் நீங்கள்தான் எனச் சொன்னேன். இந்தக் கொடுமையான, இரக்கமற்ற, சக்திவாய்ந்த எதிரியான ‘கும்பா’வுக்கு உயிர் கொடுத்தது திருப்திகரமாக இருந்தது. இப்படத்தில் இணைந்ததற்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்துக்காக ‘குளோப் டிரோட்டர்’ என்ற சாகச உலகத்தைப் படக்குழு உருவாக்கியுள்ளது. இதற்கான விழா ஐதராபாத்தில் நவ.15-ம் தேதி நடைபெற இருக்கிறது.