தென்னிந்திய சினிமா

‘பாகுபலி: தி எபிக்’ படத்தில் தமன்னாவின் காதல் கதை நீக்கம் ஏன்? - இயக்குனர் ராஜமவுலி

செய்திப்பிரிவு

பிரபாஸ், ராணா, தமன்னா, அனுஷ்கா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் உள்பட பலர் நடித்த படம் ‘பாகுபலி’. எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் 2 பாகமாக வெளியான இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்றது.

இப்போது 2 படங்களையும் இணைத்து ஒரே படமாக ‘பாகுபலி: தி எபிக்’ என்ற பெயரில் வெளியிட்டுள்ளனர். இதில் தமன்னாவின் காதல் காட்சிகள் உள்பட பல்வேறு காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.

இதுபற்றி இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி கூறும்போது, “இரண்டு பகுதியையும் இணைத்து டைட்டில்களை நீக்கியபிறகு 5 மணி நேரம் 27 நிமிடங்கள் ஓடக் கூடியதாகப் படம் இருந்தது. அதையும் சுருக்கினோம். இப்போது 3 மணி நேரம் 43 நிமிடங்களாக இருக்கிறது. தமன்னா மற்றும் பிரபாஸின் காதல் கதை மற்றும் அவர்களுக்கான பாடல் காட்சிகள் உள்பட பல பகுதிகள் நீக்கப்பட்டன.

‘பாகுபலி’யின் ஒவ்வொரு காட்சியும் உணர்ச்சி ரீதியாகவும் கதை ரீதியாகவும் முக்கியமானது. ஆனால் புதிய பதிப்பு முற்றிலும் கதை சார்ந்ததாக இருக்க வேண்டும் என்று விரும்பினோம்.

முதலில் எடிட் செய்தபோது 4 மணி நேரம் 10 நிமிடங்கள் இருந்தது. சினிமா மற்றும் பிற துறை சார்ந்த பார்வையாளர்களுக்குச் சிறப்பு காட்சிகளை ஏற்பாடு செய்தோம். அவர்கள் கருத்துகளின் அடிப்படையில், அதை 3 மணி நேரம் 43 நிமிடங்களாகக் குறைத்தோம்” என்றார்.
இந்தப் படமும் இப்போது வரவேற்பைப் பெற்று வருகிறது.

SCROLL FOR NEXT