தென்னிந்திய சினிமா

அக்.31-ல் ஓடிடியில் வெளியாகிறது ‘காந்தாரா: சாப்டர் 1’

ஸ்டார்க்கர்

அக்டோபர் 31-ம் தேதி ஓடிடி தளத்தில் ‘காந்தாரா: சாப்டர் 1’ வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து வெளியான படம் ‘காந்தாரா: சாப்டர் 1’. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியளவில் வரவேற்பைப் பெற்றதால், இப்படம் 8 வாரங்கள் கழித்தே ஓடிடியில் வெளியாகும் என கருதப்பட்டது. ஆனால், யாருமே எதிர்பாராத வகையில் அக்டோபர் 31-ம் தேதி ‘காந்தாரா: சாப்டர் 1’ வெளியாகும் என அறிவித்திருக்கிறார்கள்.

அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் ‘காந்தாரா: சாப்டர் 1’ வெளியாகவுள்ளது. திரையரங்குகளில் ரூ.850 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து பெரும் சாதனை படைத்துள்ளது. மேலும், 2025-ம் ஆண்டில் அதிக வசூல் செய்த இந்தியப் படம் என்ற மாபெரும் சாதனையையும் நிகழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள இப்படத்தில் ஜெயராம், ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஹோம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தினை தயாரித்து வெளியிட்டது. தமிழகத்தில் இப்படத்தினை வெளியிட்ட அனைத்து விநியோகஸ்தர்களும் நல்ல லாபம் கிடைத்திருப்பதாக வர்த்தக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

SCROLL FOR NEXT