தென்னிந்திய சினிமா

தமிழில் வருகிறது பாலகிருஷ்ணாவின் ‘அகண்டா 2’

செய்திப்பிரிவு

தெலுங்கில் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் பாலகிருஷ்ணா. ரசிகர்கள் அவரை பாலய்யா என்று அழைத்து வருகின்றனர். அவர் படங்களில் ரத்தம் தெறிக்கும் ஆக் ஷனுக்கும் அதிரடியான பஞ்ச் வசனங்களுக்கும் பஞ்சமிருக்காது. அவர் நடித்து 2021-ல் வெளியான ‘அகண்டா’, சூப்பர் ஹிட் வெற்றியைத் தெலுங்கில் பெற்றது. போயபட்டி ஸ்ரீனு இயக்கிய இதில் பாலகிருஷ்ணா 2 வேடங்களில் நடித்திருந்தார்.

இப்படத்தின் 2-ம் பாகம் இப்போது உருவாகிஉள்ளது. ஃபேன்டஸி ஆக் ஷன் படமாக உருவாகியுள்ள இதில், பால கிருஷ்ணாவுடன் சம்யுக்தா மேனன், ஆதி பினிஷெட்டி, ஹர்ஷாலி மல்ஹோத்ரா உள்பட பலர் நடித்துள்ளனர். தமன் இசை அமைத்துள்ள இந்தப் படம் தமிழிலும் வெளியாக இருக்கிறது. டிச.5-ல் ரிலீஸாக இருப்பதாக அறிவித்துள்ள படக்குழு, தமிழ் டீஸரையும் வெளியிட்டுள்ளது.

அதில் பாலகிருஷ்ணா, “சவுண்டை கண்ட்ரோல்ல வச்சுக்கோ, எந்த சவுண்டுக்கு சிரிப்பேன், எந்த சவுண்டுக்கு வெட்டுவேன்னு எனக்கே தெரியாது; உன்னால நினைச்சு கூட பார்க்க முடியாது” என்று ஆவேசமாகப் பேசும் வசனம் வெளியாகி உள்ளது. இந்த டீஸர் வரவேற்பைப் பெற்று வருகிறது.

SCROLL FOR NEXT