தென்னிந்திய சினிமா

ஆங்கிலத்தில் வெளியாகிறது ‘காந்தாரா: சாப்டர் 1’!

செய்திப்பிரிவு

ரிஷப் ஷெட்டி, கன்னடத்தில் இயக்கி நடித்த ‘காந்தாரா’ 2022-ம் ஆண்டு வெளியானது. இப்படம், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றது.

ஹோம்பாளே பிலிம்ஸ் தயாரித்த இதன் முதல் பாகம் ‘காந்தாரா: சாப்டர் 1’ என்ற பெயரில் அக்.2-ல் வெளியானது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தப்படம் மெகா வெற்றி பெற்றுள்ளது. மற்ற மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதில் ருக்மணி வசந்த், ஜெயராம், குல்சன் தேவையா, பிரமோத் ஷெட்டி, சம்பத்ராம் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் இதுவரை ரூ.818 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. ஆயிரம் கோடி ரூபாயை வசூலிக்கும் என்கிறார்கள்.

இந்நிலையில் இப்படத்தை ஆங்கிலத்தில் டப் செய்து வெளியிட உள்ளனர். இதன் ஆங்கிலப் பதிப்பு அக்.31-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. 2.48 மணி நேரம் ஓடும் இப்படத்தை, ஆங்கிலத்துக்காக 2.14 மணி நேரமாகக் குறைத்துள்ளனர்.

SCROLL FOR NEXT