தென்னிந்திய சினிமா

‘லோகா’ படத்தை தெலுங்கில் எடுத்திருந்தால்... - தயாரிப்பாளரின் அதிர்ச்சிப் பேச்சு

ஸ்டார்க்கர்

‘லோகா’ படத்தை தெலுங்கில் எடுத்திருந்தால் தோல்வியடைய வைத்திருப்பார்கள் என்று நாக வம்சி தெரிவித்துள்ளார். அவருடைய பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘மாஸ் ஜாத்ரா’ படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக ரவி தேஜா மற்றும் தயாரிப்பாளர் நாக வம்சி இருவரும் இணைந்து பேட்டியொன்று அளித்திருக்கிறார்கள். இப்பேட்டியில் ‘லோகா’ படம் குறித்து நாக வம்சி பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏனென்றால் ‘லோகா’ படத்தினை தெலுங்கில் விநியோகம் செய்தவர் நாக வம்சி என்பது நினைவுக் கூரத்தக்கது.

‘லோகா’ குறித்து நாக வம்சி, “லோகா படத்தினை தெலுங்கில் விநியோகம் செய்தேன். அப்படத்தினை தெலுங்கில் நேரடி படமாக எடுத்திருந்தால், பார்வையாளர்கள் மிகவும் மெதுவாக நகர்வதாக கூறி தோல்வியடைய வைத்திருப்பார்கள். அவர்கள் அப்படி செய்யவில்லை என்றால் நான் எனது பெயரை மாற்றிக் கொள்வேன்” என்று தெரிவித்துள்ளார்.

தெலுங்கில் ‘லோகா’ படம் மாபெரும் வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது. எப்போதுமே அதிரடி கருத்துகளுக்கு பெயர் பெற்றவர் தயாரிப்பாளர் நாக வம்சி. பலமுறை இந்த மாதிரியான கருத்துகளை தெரிவித்து இணையவாசிகளுக்கு மத்தியில் கிண்டலுக்கு ஆளானவர். இதே பேட்டியில் ‘வார் 2’ படத்தின் தெலுங்கு விநியோகத்தை ஆதித்யா சோப்ராவை நம்பி வாங்கி விநியோகம் செய்து தோல்வியடைந்ததாக ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT