தென்னிந்திய சினிமா

தீபிகாவுக்கு பதில் அனுஷ்கா: ரசிகர்கள் கோரிக்கை

செய்திப்பிரிவு

நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப்பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், 'கல்கி 2898 ஏடி'. கமல்ஹாசன் வில்லனாக நடித்திருந்தார். வைஜெயந்தி மூவிஸ் தயாரித்த இந்தப் படத்தின் 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இந்நிலையில், 2-ம் பாகத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கப்பட்டுள்ளார்.

குறைவான பணி நேரம், 25 சதவீத சம்பள உயர்வு, அவருடைய குழுவினருக்கான தங்குமிடம் ஆகியவற்றில் தயாரிப்பு தரப்புக்கும் தீபிகா படுகோனுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் அவர் நீக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர் இடத்தில் வேறு யார் நடிக்க இருக்கிறார்கள் என்பதைப் படக்குழு அறிவிக்கவில்லை. இந்நிலையில் அந்த கதாபாத்திரத்தில் அனுஷ்கா ஷெட்டியை நடிக்க வைக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பிரபாஸுக்கும் அனுஷ்காவுக்குமான ‘கெமிஸ்ட்ரி’ எப்போதும் சிறப்பானது என்றும் அதனால் அவர் சரியான தேர்வாக இருக்கும் என்றும் சமூக வலைதளங்களில் எழுதி வருகின்றனர்.

SCROLL FOR NEXT