செப்டம்பர் 4-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ‘கண்ணப்பா’ வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
மோகன்பாபு தயாரிப்பில் விஷ்ணு மஞ்சு நடித்த புராணப் படம் ‘கண்ணப்பா’. பல்வேறு மொழிகளில் இருந்து முன்னணி நடிகர்கள், இந்திய அளவில் பிரம்மாண்ட விளம்பரப்படுத்துதல் என வெளியான இப்படம் எதிர்பார்த்த வசூல் வரவேற்பைப் பெறவில்லை. மேலும், படக்குழுவினரும் ட்ரோல் செய்தால் கடும் நடவடிக்கை என எச்சரித்து இருந்தது. ஜூன் 27-ம் தேதி வெளியான இப்படம் ஓடிடியில் வெளியிடப்படாமல் இருந்தது.
தற்போது இப்படம் செப்டம்பர் 4-ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மொழிகளிலும் வெளியிடப்படும் என தெரிகிறது. இந்திப் பட இயக்குநர் முகேஷ் குமார் சிங் இயக்கிய இப்படத்தில் சரத்குமார், பிரீத்திமுகுந்தன், மோகன்பாபு, மது, கருணாஸ், பிரம்மாஜி, பிரம்மானந்தம் உள்பட பலர் நடித்திருந்தனர்.
சிறப்புத் தோற்றத்தில் மோகன்லால், பிரபாஸ், காஜல் அகர்வால், அக்ஷய்குமார் என பலர் நடித்திருந்தனர். இப்படத்தினை பல்வேறு குருக்கள், எம்.பிக்கள் என பலருக்கும் படக்குழு திரையிட்டுக் காட்டியது குறிப்பிடத்தக்கது. அவர்களது தரப்பில் இருந்து படத்திற்கு பெரும் பாராட்டு கிடைத்தது.
Witness the epic, spirit of sacrifice & divinity #KANNAPPA releases digitally on Sept 4, 2025 only on Prime Video.
Har Har Mahadev
Har Ghar Mahadev #KannappaOnPrime #KannappaMovie #HarHarMahadevॐ pic.twitter.com/WVrbZ2AMvn