தென்னிந்திய சினிமா

ராஜமவுலி பட போஸ்டரை வெளியிடுகிறாரா ஜேம்ஸ் கேமரூன்!

செய்திப்பிரிவு

இயக்குநர் ராஜமவுலி, மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இதில் பிரியங்கா சோப்ரா உள்பட பலர் நடிக்கின்றனர்.

இது வாராணசியின் வரலாற்றைப் பேசும் கதையாக உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது. இதற்காக பல கோடி ரூபாயில் அமைத்த செட் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில், இதன் முதல் தோற்ற போஸ்டரை நவம்பரில் ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் வெளியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. ‘அவதார் - 3’ படத்தின் புரமோஷனுக்காக ஜேம்ஸ் கேமரூன் இந்தியா வருகிறார். அப்போது, வெளியிடுவார் என்கிறார்கள்.

SCROLL FOR NEXT