தென்னிந்திய சினிமா

மீண்டும் இணைகிறது ‘பிரேமம்’ படக்குழு

ப்ரியா

அல்போன்ஸ் புத்திரன் இயக்கவுள்ள புதிய படத்தில் நிவின் பாலி நாயகனாக நடிக்கவுள்ளார்.

2015-ம் ஆண்டு வெளியாகி இந்தியளவில் அனைவராலும் கொண்டாடப்பட்ட படம் ‘பிரேமம்’. இதற்குப் பிறகு அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய ‘கோல்ட்’ படத்தினை இயக்கினார். இப்படம் பெரும் தோல்வியை தழுவியது. பல்வேறு நடிகர்களிடம் அடுத்த படத்துக்கான கதைகள் கூறிவந்தார் அல்போன்ஸ் புத்திரன்.

தற்போது அல்போன்ஸ் புத்திரன் கதையில் நிவின் பாலி நடிப்பது உறுதியாகி இருக்கிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இந்தக் கூட்டணி மீண்டும் இணைவது இணையவாசிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது.

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டின் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘பிரேமம்’. முழுக்க காதலை மையப்படுத்தி வெளியான இப்படம் பெரிதும் கொண்டாடப்பட்டது. இப்படத்தின் பாடல்கள் தற்போதும் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT