தென்னிந்திய சினிமா

‘லெனின்’ படத்திலிருந்து ஸ்ரீலீலா விலகல்: பின்னணி என்ன?

ப்ரியா

‘லெனின்’ படத்திலிருந்து ஸ்ரீலீலா விலகியிருக்கிறார். இதற்கான காரணம் என்னவென்று தெரியவந்துள்ளது.

முரளி கிஷோர் இயக்கத்தில் அகில் அக்கினேனி, ஸ்ரீலீலா நடிப்பில் தொடங்கப்பட்ட படம் ‘லெனின்’. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. மேலும், அதிலிருந்து அகில் பிறந்த நாளுக்கு டீஸர் ஒன்றும் வெளியிடப்பட்டது. தற்போது தேதிகள் பிரச்சினையால் இப்படத்தில் இருந்து விலகியிருக்கிறார் ஸ்ரீலீலா.ஸ்ரீலீலாவுக்கு பதிலாக பாக்யஸ்ரீ போஸ் ஒப்பந்தமாகி இருக்கிறார். ஸ்ரீலீலாவை வைத்து 3 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்தியிருப்பதால், பெரிதாக பாதிப்பில்லை என்கிறது படக்குழு. ஸ்ரீலீலா ஏன் இப்படத்திலிருந்து விலகியிருக்கிறார் என்பது குறித்து விசாரித்த போது, பவன் கல்யாண் நடித்து வரும் ‘உஸ்தாத் பகத் சிங்’ படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் ஸ்ரீலீலா தான் நாயகியாக நடித்து வந்தார். ஆனால், பவன் கல்யாண் அரசியலில் மும்முரமானதால் இதன் படப்பிடிப்பு நடைபெறவே இல்லை. தற்போது படப்பிடிப்பு தொடங்கப்பட்டு இருப்பதால், ‘லெனின்’ படத்திலிருந்து விலகி ‘உஸ்தாத் பகத் சிங்’ படத்துக்கு தேதிகள் ஒதுக்கிவிட்டார் ஸ்ரீலீலா என்கிறார்கள்.நாயகியாக பாக்யஸ்ரீ போஸ் ஒப்பந்தமாகி இருப்பது குறித்து படக்குழு விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளது.

SCROLL FOR NEXT