தென்னிந்திய சினிமா

உலக அளவில் ரூ.100 கோடி வசூல் செய்த ‘குபேரா’

ப்ரியா

தனுஷ் நடிப்பில் வெளியான ‘குபேரா’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலித்துள்ளது.

சேகர் கமுலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘குபேரா’. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகியுள்ள இப்படத்துக்கு தமிழில் கலவையான விமர்சனங்களும், தெலுங்கில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் இப்படம் வெளியான 5 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்படம் இந்தியாவில் மட்டுமே ரூ.65 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் நாளில் இந்தியாவில் ரூ.14 கோடி வசூலித்த நிலையில் புதன்கிழமையான இன்று ரூ.4 கோடி வசூலித்துள்ளது. தமிழகத்தை விட தெலுங்கு பேசும் மாநிலங்களில் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இப்படத்தின் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வையும் கூட படக்குழு ஹைதராபாத்தில் நடத்தியது. இதில் சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

View this post on Instagram

A post shared by Dhanush (@dhanushkraja)

SCROLL FOR NEXT