தென்னிந்திய சினிமா

மும்பையில் தொடங்கியது அல்லு அர்ஜுன், அட்லி பட ஷூட்டிங்!

செய்திப்பிரிவு

நடிகர் அல்லு அர்ஜுன், ‘புஷ்பா 2’ படத்தை அடுத்து நடிக்கும் திரைப்படத்தை அட்லி இயக்குகிறார். அல்லு அர்ஜுனின் 22- வது படமான இதை கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதில் நாயகியாக தீபிகா படுகோன் நடிக்கிறார்.

இந்த சயின்ஸ் பிக்‌ஷன் திரைப்படம் ‘பான் வேர்ல்டு’ படமாக இருக்கும் என்று படக்குழு ஏற்கெனவே தெரிவித்துள்ளது. இந்நிலையில் இதன் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி இருக்கிறது. அங்கு தொடர்ந்து 3 மாதங்கள் படப்பிடிப்பு நடக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

அங்கு பிரம்மாண்ட ஆக்‌ஷன் காட்சிகள் உள்பட வசன காட்சிகளும் படமாக்கப்படுகின்றன. இதை முடித்துவிட்டு விபிஎக்ஸ் காட்சிகளுக்காகப் படக்குழு அமெரிக்கா செல்ல இருக்கிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT