பவன் கல்யாண் நடித்துள்ள ‘ஹரி ஹர வீர மல்லு’ திரைப்படம் ஜூலை 24-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஹரி ஹர வீர மல்லு’. பல ஆண்டுகளாக இப்படம் தயாரிப்பில் இருக்கிறது. மேலும், பல முறை வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. இம்மாதம் வெளியாவதாக இருந்த படமும் ஒத்திவைக்கப்பட்டு, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தற்போது படத்தின் கிராபிக்ஸ் உள்ளிட்ட பணிகள் அனைத்துமே முடிந்துவிட்டது. இதனைத் தொடர்ந்து ‘ஹரி ஹர வீர மல்லு’ படத்தின் ஓடிடி உரிமையினை கைப்பற்றிய நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையின் இறுதியில் ஜூலை 24-ம் தேதி ‘ஹரி ஹர வீர மல்லு’ வெளியாகும் என முடிவு எடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
விரைவில் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டு, விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. ஜோதி கிருஷ்ணா இயக்கியுள்ள ‘ஹரி ஹர வீர மல்லு’ படத்தில் பவன் கல்யாண், பாபி தியோல், சத்யராஜ், நிதி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என அனைத்து மொழிகளிலும் வெளியாக இருக்கிறது.
#HariHaraVeeraMallu in cinemas July 24th, 2025. pic.twitter.com/klEshG4n1L