தென்னிந்திய சினிமா

ஒரே மேடையில் தோன்றுவார்களா நாக சைதன்யா - சமந்தா?

ஸ்டார்க்கர்

தெலுங்கு திரையுலகில் மீண்டும் நாக சைதன்யா – சமந்தா சந்திப்பார்களா என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது. ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் தெலுங்கு பதிப்பு ‘Ye Maaya Chesave’. இதில் சிம்பு மற்றும் த்ரிஷா கதாபாத்திரத்தில் நாக சைதன்யா மற்றும் சமந்தா நடித்திருந்தார்கள். இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் படப்பிடிப்பில்தான் நாக சைதன்யா – சமந்தா இருவரும் காதல் உருவானது. இருவருமே திருமணம் செய்து சில வருடங்களில் விவாகரத்து பெற்றுவிட்டார்கள்.

தற்போது நாக சைதன்யா மீண்டும் திருமணம் செய்து கொண்டார். ஆனால், சமந்தா திருமணம் செய்து கொள்ளவில்லை. இருவருமே விவாகரத்து பெற்ற பின்பு சந்தித்துக் கொள்ளவே இல்லை. தற்போது ஜூலை 18-ம் தேதி ‘Ye Maaya Chesave’ ரீரிலீஸ் ஆகவுள்ளது. இதனை விளம்பரப்படுத்தலாம் என்று தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது.

இந்த நிகழ்வுகளில் நாக சைதன்யா – சமந்தா இருவரும் ஒன்றாக பங்கேற்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், இருவருமே சமூக வலைதளங்களில் ஒருவரை ஒருவரை டேக் செய்வதில்லை. இதன் விளம்பர நிகழ்வுகளை இருவருமே சமூக ஊடகங்களில் பகிர்வார்களா என்ற கேள்வியும் நிலவி வருகிறது.

SCROLL FOR NEXT