தென்னிந்திய சினிமா

கேரளாவில் வசூல் அள்ளும் மோகன்லாலின் ‘துடரும்’

செய்திப்பிரிவு

தருண் இயக்கத்தில் மோகன்லால், ஷோபனா நடித்துள்ள மலையாள படம், 'துடரும்'. ஏப். 25-ம் தேதி வெளியான இந்த கிரைம் டிராமா திரைப்படத்தில் பர்ஹான் ஃபாசில், மணியன்பிள்ளை ராஜு, பினு பாப்பு, தாமஸ் மாத்யூ, கிருஷ்ண பிரபா உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதுவரை ரூ.190 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்தப் படம் அசத்தியுள்ளது. கேரள மாநிலத்திலும் அதிகம் வசூலித்துள்ளது. இதனால், இதுவரை வெளியான மலையாள திரைப்படங்களில் கேரளாவில் மட்டும் அதிகம் வசூலித்த படமாக 'துடரும்' இருப்பதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. அதிக வசூல் செய்த மலையாளப் படமான '2018' படத்தின் வசூலை இந்தப் படம் தாண்டியுள்ளது.

மோகன்லாலின் 'எல் 2: எம்புரான்' (ரூ.265.5 கோடி), மஞ்சும்மள் பாய்ஸ் (ரூ.240 கோடி) ஆகிய படங்களின் வசூலை அடுத்து மூன்றாவது இடத்தில் துடரும் உள்ளது. இந்தப் படம் தமிழில் 'தொடரும்' என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT