‘ஹரி ஹர வீர மல்லு’ படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துவிட்டது. ஆனால், எப்போது வெளியாகும் என்பது விரைவில் தெரியவரும்.
பவன் கல்யாண் நடிப்பில் நீண்ட வருடங்களாக தயாரிப்பில் இருக்கும் படம் ‘ஹரி ஹர வீர மல்லு’. தற்போது இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து விட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. பவன் கல்யாண் சம்பந்தப்பட்ட கடைசி 2 நாட்கள் படப்பிடிப்பை முடித்து, இதனை அறிவித்துள்ளது படக்குழு.
சமீபத்தில் பவன் கல்யாணின் மகன் சிங்கப்பூரில் தீ விபத்தில் சிக்கினார். இதனால் பவன் கல்யாண் குடும்பத்தினர் சிங்கப்பூருக்கு சென்றார்கள். இதனை முன்னிட்டு பவன் கல்யாண் இப்படத்துக்கு தேதியை ஒதுக்குவதில் தாமதம் ஆனது. விரைவில் இறுதிகட்டப் டப்பிங் பணிகளிலும் கலந்துக் கொள்ளவுள்ளார் பவன் கல்யாண்.
இப்படம் மே 9-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், பவன் கல்யாண் மகனுக்கு ஏற்பட்ட விபத்தினால் பட வெளியீடு தாமதமானது. தற்போது விரைவில் புதிய வெளியீடு தேதி அறிவிக்கப்படவுள்ளது. மே 30-ம் தேதி அல்லது ஜூன் 2-வது வாரத்தில் வெளியாகும் என தெலுங்கு திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Powerstar @PawanKalyan Garu finishes shooting for #HariHaraVeeraMallu
The shoot wraps with a bang, and what’s coming next will set screens on fire!
A MASSIVE trailer and Blockbuster songs are on the way! @AMRathnamOfl @thedeol #SatyaRaj @AgerwalNidhhi… pic.twitter.com/47u3JMPcSk