அட்லீ படத்துக்குப் பின் த்ரிவிக்ரம் இயக்கத்தில் நடிக்க அல்லு அர்ஜுன் முடிவு செய்திருப்பது உறுதியாகி இருக்கிறது.
அல்லு அர்ஜுன் பிறந்த நாளை முன்னிட்டு, அட்லீ படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோ பதிவு இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் இப்படத்தை வெளியிடவுள்ளது படக்குழு.
அட்லீ படத்துக்குப் பின் த்ரிவிக்ரம் இயக்கத்தில் நடிப்பார் அல்லு அர்ஜுன் என தகவல் வெளியானது. ஆனால், எதுவுமே உறுதிப்படுத்தபடாமல் இருந்தது. இன்று பிறந்த நாளை முன்னிட்டு த்ரிவிக்ரம் படமும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. த்ரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை கீதா ஆர்ட்ஸ் மற்றும் ஹரிகா & ஹாசினி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளன. இது தொடர்பான புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்கள்.
த்ரிவிக்ரம் படம் முன்பே அறிவிக்கப்பட்டுவிட்டாலும், அதன் கதை இறுதியாகாத காரணத்தினால் அட்லீ படத்தை தொடங்குகிறார் அல்லு அர்ஜுன். அதனை முடித்துவிட்டு த்ரிவிக்ரம் படத்தை தொடங்க முடிவு செய்திருக்கிறார். இப்படம் வரலாற்று பின்னணியாக கொண்டது என செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
Wishing a very happy Birthday to our dearest ICON STAR @alluarjun garu
May your journey be more iconic & impactful. Here’s to creating more chapters of cinema’s most electrifying saga
Can't wait to begin our #Production8 soon! #HappyBirthdayAlluArjun pic.twitter.com/7t5NyJcfCu