தென்னிந்திய சினிமா

கட்டாளன் முதல் தோற்றம் வெளியீடு!

செய்திப்பிரிவு

உன்னி முகுந்தன் நடித்து சூப்பர் ஹிட்டான பான் இந்தியா படம், ‘மார்கோ’. ஆக்‌ஷன், திரில்லர் படமான இதைத் தயாரித்த ஷெரிப் முகம்மது, தனது கியூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் அடுத்துத் தயாரிக்கும் படத்துக்கு ‘கட்டாளன்’ என்று தலைப்பு வைத்துள்ளார்.

இதில் மலையாள நடிகர் பிபி (ஆண்டனி வர்கீஸ்) முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கிறார். இவர், மலையாளத்தில் வெற்றி பெற்ற அங்கமாலி டைரிஸ், ஜல்லிக்கட்டு, ஆர்டிஎக்ஸ் என பல படங்களில் நடித்துள்ளார்.

‘கட்டாளன்’ படத்தை பால் ஜார்ஜ் இயக்குகிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்கள் விவரம் விரைவில் வெளியாக இருக்கிறது.

SCROLL FOR NEXT