தென்னிந்திய சினிமா

அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன்

ஸ்டார்க்கர்

அட்லி இயக்கவுள்ள அடுத்த படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது.

’ஜவான்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு அட்லி இயக்கும் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. முதலில் சல்மான்கான் நாயகனாக நடிக்கவிருப்பதாகவும், இன்னொரு நாயகனாக ரஜினி – கமல் இருவரில் ஒருவரை நடிக்கவைக்க அட்லி முயற்சி செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், இப்படம் சம்பள பிரச்சினையால் நடைபெறவில்லை.

தற்போது அதே கதையில் அல்லு அர்ஜுன் நடிக்க வைக்க திட்டமிட்டு இருக்கிறார் அட்லி. இன்னொரு நாயகனாக யார் நடிக்கவுள்ளார் என்பது இன்னும் முடிவாகவில்லை. இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. அட்லி – அல்லு அர்ஜுன் இருவருமே பெரிய சம்பளம் கேட்டதால் நீண்ட நாட்களாக இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மே மாதத்தில் தான் வரும் என கூறப்படுகிறது. இதில் அல்லு அர்ஜுனுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெறவுள்ளது. இதில் 3 பேர் நாயகிகளாக நடிக்கவுள்ளார்கள். இது அரசர் காலமும், நிகழ் காலமும் கலந்து நடக்கும் கதை என்பதால் கிராபிக்ஸ் காட்சிகளுக்கே பெரிய தொகையை செலவு செய்ய உள்ளது தயாரிப்பு நிறுவனம்.

SCROLL FOR NEXT