மோகன்லால் நடித்துள்ள ‘எம்புரான்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஹாலிவுட் நடிகர் ஜெரோம் ஃப்ளின். பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘லூசிஃபர்’. இதன் 2-ம் பாகமாக ‘எல்2: எம்புரான்’ உருவாகியுள்ளது. இதில் பிருத்விராஜ், டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர், சுராஜ் வெஞ்சரமூடு, சானியா ஐயப்பன் உள்ளிட்ட பலர் மோகன்லால் உடன் நடித்திருக்கிறார்கள். லைகா நிறுவனம் மற்றும் ஆசிர்வாத் சினிமாஸ் இணைந்து இப்படத்தினை தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தில் 'கேம் ஆப் த்ரோன்ஸ்' மற்றும் 'ஜான் விக் சாப்டர் 3 ' போன்ற ஹாலிவுட் படங்களில் நடித்த ஜெரோம் ஃபிளின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘எல்2 எம்புரான்’ படத்தில் நடித்தது குறித்து ஜெரோம் ஃபிளின் “இப்படத்தில் போரீஸ் ஆலிவர் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் கிடைத்த அனுபவத்தை விட இந்திய திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவம் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. இந்திய கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியது மறக்க இயலாத அனுபவத்தை வழங்கி இருக்கிறது.
என்னுடைய வாழ்க்கையில் இந்தியா மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. என்னுடைய இளமைக் காலத்தில் இந்தியாவிற்கு ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டு இருக்கிறேன். அந்த பயணமும், அதன் மூலம் கிடைத்த அனுபவமும் என் வாழ்க்கையை மாற்றி அமைத்தது. அதன் பிறகு இந்த கலை உலக வாழ்க்கையை தேர்வு செய்தேன். இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தை பற்றி சொல்வதை விட, குரேஷியின் பயணத்தில் என்னுடைய கதாபாத்திரம் முக்கியமானது. அதனை ரசித்து நடித்திருக்கிறேன். அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்
Character No.07
Jerome Flynn as Boris Oliver in #L2E #EMPURAANhttps://t.co/IYsKqWjYgR
Malayalam | Tamil | Hindi | Telugu | Kannada #March27 @mohanlal #muraligopy @antonypbvr @aashirvadcine @Subaskaran_A @LycaProductions @gkmtamilkumaran @prithvirajprod #SureshBalaje… pic.twitter.com/Gw3jznICPc